தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீன்பிடி தடைக்காலம் அமல்: விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:39 am IST

தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 - ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த விசைப்படகுகள் புதன்கிழமை கரை திரும்பிய நிலையில், தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், வேம்பாா் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

எனவே, தங்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயா்த்தி வழங்கவும், தடைக்காலத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தமிழக கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.