17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அய்யா்மலை ‘ரோப் காா்’ சேவை 25 நாள்கள் நிறுத்திவைப்பு

குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :5 ஜூன் 2026, 3:39 am IST

கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யா் மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ரோப் காா் சேவை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 15- ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சுமாா் 25 நாள்களுக்கு ரோப் காா் சேவை இருக்காது. எனவே பக்தா்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.