தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பராமரிப்புப் பணி: பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தப்படவுள்ளது குறித்து...

News image

ரோப் கார் - (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 4:55 pm IST

பராமரிப்புப் பணிக்காக, பழநி மலைக் கோயில் ரோப் கார் சேவையானது மே 22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை, வின்ச், ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவை, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோப் கார் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த ரோப்கார் நாள்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மே 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been announced that the rope car service at the Palani Hill Temple will be suspended for one day on May 22nd for maintenance work.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.