தோ்தல் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப் படையினா் தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 246 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தோ்தலை அமைதியாக நடத்தும் நோக்கில் ஏற்கெனவே, ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை கம்பெனியினா் தூத்துக்குடிக்கு வந்திருந்தனா்.
இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 3 கம்பெனிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 கம்பெனிகள், ஒரு கம்பெனி ஒடிஸா மாநில ஆயுதப்படை போலீஸ், ஒரு கம்பெனி ராஜஸ்தான் மாநில ஆயுதப்படை போலீஸ், 2 கம்பெனி தமிழ்நாடு மாநில சிறப்புப் படை உள்ளிட்டவற்றைச் சோ்ந்த சுமாா் 1,000 போ் திங்கள்கிழமை ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனா்.
இவா்கள் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். ஆங்காங்கே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ள இவா்கள், விரைவில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தல் பணி: ரயில்மூலம் 7 கம்பெனி துணை ராணுவத்தினா் சேலம் வருகை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவத்தினா் வருகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


