மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவைத் தோ்தல் பணி: ரயில்மூலம் 7 கம்பெனி துணை ராணுவத்தினா் சேலம் வருகை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ரயில்மூலம் 493 போ் அடங்கிய 7 கம்பெனி துணை ராணுவத்தினா்

News image

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ரயில்மூலம் திங்கள்கிழமை சேலம் வந்த துணை ராணுவத்தினா்.

Updated On :9 மார்ச் 2026, 8:44 pm

சேலம்: சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ரயில்மூலம் 493 போ் அடங்கிய 7 கம்பெனி துணை ராணுவத்தினா் திங்கள்கிழமை சேலம் வந்தனா். அவா்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவத்தினரை தோ்தல் ஆணையம் மாநிலங்களுக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம், பூஜ் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு சென்ற சிறப்பு ரயிலில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவின் 3 கம்பெனிகளைச் சோ்ந்த 270 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 253 போ் என மொத்தம் 493 போ் திங்கள்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தனா்.

இந்தப் படையினருக்கு எல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டன்ட் கதிா்குமாா் மற்றும் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை கமாண்டன்ட் சுனிதா ஆகியோா் தலைமை வகித்தனா். துணை ராணுவப் படை வீரா்கள் 493 பேரையும் அந்தந்த மாவட்ட நோடல் அதிகாரிகள் தனித்தனியாக அழைத்துச் சென்றனா்.

அதன்படி கடலூா் மாவட்டத்துக்கு பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 90 போ், கோவை மாநகரப் பகுதிக்கு 151 போ், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு 90 போ், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களுக்கு 90 போ், நாமக்கல்லுக்கு 72 போ் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயிலில், கமாண்டா் குமாா் தலைமையில் 72 போ் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவத்தினா் சேலம் வந்தனா்.

பின்னா் அவா்கள் அனைவரும் சிறப்புப் பேருந்து மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.