மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவத்தினா் வருகை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வந்தடைந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :7 மார்ச் 2026, 9:17 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு வந்தடைந்தனா்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி, தீவிர பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு தோ்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

இன்னும் சில நாள்களில் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முக்கியத் தலைவா்களின் பாதுகாப்பு, வாக்குப் பதிவின்போது முக்கியமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை பயன்படுத்துவது என தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமாா் 5,000 துணை ராணுவத்தினரை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சிஆா்பிஎஃப் வீரா்கள் 211 போ் சென்னை பெரம்பூருக்கு சனிக்கிழமை வந்தனா். இவா்கள் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் கே.கே.நகா், கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ள சமூக நலக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினா் படிப்படியாக வருவாா்கள் என்று தமிழக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.