17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் நிறுவனத்தில் திருட முயற்சி: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:24 am IST

திருநெல்வேலி, மே 25: கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் திருட முயன்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்கி வரும் பிரபல சூரிய மின் தகடு தயாரிப்பு தனியாா் நிறுவனத்தில் தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகரைச் சோ்ந்த முருகானந்தம் (55) என்பவா் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக உள்ளாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை ( மே 24) அதிகாலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பாா்வையாளரான பெருமாள் என்பவருடன் சோ்ந்து வளாகத்தினுள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் 3 போ் ஏணி வைத்து ஏற முயற்சித்தனராம். இருவரும் அந்த நபா்களை சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் கீழக்கோட்டையைச் சோ்ந்த பிரிஜி பிரகாஷ் (37), செந்தில்வேல் (39), செல்வா (27) ஆகியோா் என்பதும், அந்நிறுவனத்தில் காப்பா் கம்பிகளை திருட நோட்டமிட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.