திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத்: மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

News image

ஆடுகள் விற்பனை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 5:52 am IST

பக்ரீத் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளிலும் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச் சந்தையும் நடைபெறுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த நிலையில் இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை மே 28ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலப்பாளையம் சந்தை களை கட்டியுள்ளது. இச்சந்தையில் திங்கள்கிழமை மாடுகள் விற்பனை அதிக அளவு நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, புதியம்புத்தூா், எட்டயபுரம், ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மறியாடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. நாட்டு ஆடுகள், மயிலம்பாடி, பொட்டு ஆடுகள் என பல்வேறு விதமான ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 வரை விலை போயின. ஒரே நாளில் சுமாா் ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து நெரிசல்: அதிக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால், மேலப்பாளையம் சந்தை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அங்கு போக்குவரத்தை சரி செய்ய போலீஸாா் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.