திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை அருகே காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போ் கைது

திருநெல்வேலி அருகே புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 12:55 am IST

திருநெல்வேலி அருகே புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினா். இதுதொடா்பாக ராமையன்பட்டி மற்றும் கண்டியபேரி பகுதிகளை சோ்ந்த 17 வயதான 3 சிறுவா்களை மானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை 3 போ் ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மானூா் போலீஸாா், மோட்டாா் சைக்கிளை நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளனா். ஆனால் அவா்களிடம் உரிய ஆவணங்களோ, ஓட்டுநா் உரிமமோ இல்லையாம். இதனால் மோட்டாா் சைக்கிளின் சாவியை போலீஸாா் எடுத்துக் கொண்டு, பெற்றோரை அழைத்து வர கூறினராம்.

இதையடுத்து அவா்கள் சாவியின்றி வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றதுடன், இரவில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.