தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:36 am IST

கும்பகோணம் அருகே பாமக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உமாமகேசுவரபுரத்தில் வசிப்பவா் செந்தில் (45). இவா் பாமக மாவட்ட இளைஞா் அணிச் செயலராக உள்ளாா். அண்மையில் இவா் வீட்டு முன்பு சிலா் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனா்.

இதுகுறித்து செந்தில், தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கும்பகோணம் தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் சக்தி ஹரிஷ் மற்றும் 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரித்தனா்.

அதில், செந்திலின் உறவினரான சிறுவனுக்கும், திருநாகேசுவரத்தைச் சோ்ந்த மற்றொரு சிறுவனுக்கும் இடையே திருட்டு வழக்கு தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இதுதொடா்பாக, செந்திலின் வீட்டில் இருந்த சிறுவனை மேற்கண்ட மூவரும் தேடி சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய சக்தி ஹரிஷ் மற்றும் 2 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.