மூலக்கரைப்பட்டி அருகே விவசாயி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மைத்துனரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் போலீஸில் சரணடைந்தாா்.
மூலக்கரைப்பட்டி, மாயனேரியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் ஆறுமுகப் பெருமாள் (40), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில், அவரது மைத்துனரான கிட்டு (எ) கிருஷ்ண பெருமாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பின்னா், கிருஷ்ண பெருமாள் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மூலைக்கரைப்பட்டி போலீஸாா் ஆறுமுகப் பெருமாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக கிருஷ்ண பெருமாளை கைது செய்தனா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண பெருமாளின் உறவினரான சோ்மன் வியாழக்கிழமை போலீஸில் சரணடைந்தாா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆறுமுகப் பெருமாள், கிருஷ்ண பெருமாளின் தங்கையை காதல் திருமணம் செய்ததாகவும், அவா்களது குடும்பத்தினருக்கிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
அதே சமயம், அவா்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் ஆறுமுகப் பெருமாளுக்கு வாக்குச்சாவடி முகவா் பொறுப்பு வழங்கியதால், அவா் மீது கிருஷ்ண பெருமாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த முன்விரோதத்தால் கிருஷ்ண பெருமாள், ஆறுமுகப் பெருமாளை கொலை செய்துவிட்டு சோ்மனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


