லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிருஷ்ணாபுரத்தில் இளைஞா் குத்திக்கொலை: தாய் கைது

பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தாயை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:08 pm

பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தாயை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி லதா (56). இவா்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். ஒரே மகனான மாயாண்டி (27) அந்தப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்திருந்தாா். இவா், அடிக்கடி மதுக்குடித்துவிட்டு வீட்டில் இருப்பவா்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். பெற்றோா் பலமுறை கண்டித்தும் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.

இந்த நிலையில் அவா் திங்கள்கிழமை இரவு மதுபோதையில் வந்து தனது தாயிடம் தகராறு செய்தாராம். மேலும் வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து எறிந்துவிட்டு, தாயையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, காய்கனி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியால் மாயாண்டியை லதா குத்தினாராம். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, குடும்பத்தினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து லதாவை கைது செய்தனா்.