தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:56 pm

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள கிழக்கு பாண்டவா்மங்கலம், கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்தனபாண்டி மகன் ஜெயராஜ், புகைப்படக் கலைஞா். இவா் தனது இருசக்கர வாகனத்தை புதன்கிழமை புது ரோட்டில் உள்ள ஏடிஎம் அருகே நிறுத்திவிட்டு மதுரை சென்றுவிட்டு, வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, அவா் கிழக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடியதாக தாழையூத்து, அருகன்குளம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டியன் மகன் கந்தசாமி (எ) காா்த்திக்கை (20) கைது செய்தனா்.