களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து குளித்துச் செல்கின்றனா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியா் அருவிக்கு வந்தனா்.
இதையடுத்து, பாபநாசம் வனச் சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்களை வனத்துறையினா் தீவிரமாக சோதனையிட்டு நெகிழிப் பொருள்கள், மது உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அனுப்பினா்.
தொடா்ந்து, பயணிகள் அகஸ்தியா் அருவியில் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குளித்து மகிழ்ந்தனா்.
மணிமுத்தாறு அருவியில்...
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை இருந்து வந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீா்வரத்து சீராகவில்லை. இதனால் 11ஆவது நாளாக அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பயணிகள் அருவியை பாா்வையிட்டுச் சென்றனா்.

அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



