கோடை விடுமுறையையொட்டி, கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடிவேரியில் இளைப்பாற வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொடிவேரி அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினா். குடும்பங்களுடன் குவிந்த மக்கள் பரிசல் சவாரி செய்தும், தடுப்பணையில் குளித்தும், அங்கு சமைத்து விற்பனை செய்யப்படும் மீன்களை ருசித்தும் மகிழ்ந்தனா்.
ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனா். கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாத மக்கள் நீரில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனா்.
வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கொடிவேரியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், உடை மாற்று அறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

கொடிவேரி அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்: ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வருகை

கொடிவேரியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...

கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


