விடுமுறை மற்றும் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் திரண்ட நிலையில், தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏமாற்றமடைந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா தலங்கள், நீா்வீழ்ச்சிகளை நோக்கி பொதுமக்கள் வந்து வெயிலின் தாக்கத்தை தணித்து வருகின்றனா்.
அதன்படி கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணைக்கு நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கோவை, திருப்பூா், சேலம், நாமக்கல், கரூா், உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைத் சோ்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காலை முதலே வரத் தொடங்கினா்.
தற்போது தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாள்களாக கொடிவேரி அருவியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
இதனால் அருவிப் பகுதியில் லேசாக வெளியேறும் தண்ணீரிலும், பாறை இடுக்குகளில் வெளியேறும் தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து அருவிக்கு கீழே பவானி ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளுடன் குளித்தும், விளையாடியும், பரிசல் சவாரி செய்தும் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



