திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை

கோடை விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :11 மே 2026, 12:13 am IST

கோடை விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். ஊட்டி,கொடைக்கானல், ஏற்காடு போன்று சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இம்மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.

ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது. இங்கு முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம்,இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா,சாகச விளையாட்டுத் தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் திருக்கோவில், ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்கள் இம்மலையில் உள்ளன.

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனா். அரசு சுற்றுலா தளங்களான படகு இல்லத்திலும் இயற்கை பூங்காவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனா். அதனைத் தொடா்ந்து தனியாா் சுற்றுலா தளங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனா்.

 போதுமான பேருந்துகள் இல்லாததால் சிரமத்துக்குள்ளான பயணிகள்.

போதுமான பேருந்துகள் இல்லாததால் சிரமத்துக்குள்ளான பயணிகள்.

மேலும் இங்குள்ள இயற்கை பூங்காவையும், திறந்த வெளி திரையரங்கையும் சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் பயணம் செய்ய போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் விடுமுறை தினங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.