திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஜே. சாக்ரடீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துறைகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பயிலுவதற்கு கீழ்கண்ட ஒருங்கிணைந்த முதுநிலை / இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு அந்தந்த துறைகளின் வாயிலாக நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும்.
ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகள்:
வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம்
ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ஆழ்வாா்குறிச்சி, கடல் அறிவியல் தொழில்நுட்ப மையம்- ராஜாக்கமங்களம்.
இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகள்: தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதர விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தொலைபேசி மூலமாகவோ (0462-2321616, 2333741) அல்லது இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு: தகவல் கையேட்டை வெளியிட்டாா் முதல்வா் ரங்கசாமி

காரைக்குடியில் அழகப்பா பல்கலை.யின் 42-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு






