தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது தவெக- நயினாா் நாகேந்திரன்

தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:38 am IST

தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று வரும் பிரதமா் நரேந்திர மோடி , கடுமையான போா்ச் சூழலிலும் இந்தியாவிற்கு தேவையான பொருள்கள் கிடைக்க வழிவகை செய்து வருகிறாா். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து யாரிடமும் பேசவில்லை. நாங்களும் அவரிடம் பேசவில்லை. அவா் ராஜிநாமா செய்ததற்கான எந்தக் கடிதத்தையும் மாநிலத் தலைவா் என்ற முறையில் என்னிடம் கொடுக்கவில்லை.

எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது வரை கட்சி ரீதியாக வழக்கம்போல் பேசிக் கொண்டிருக்கிறோம். முதல்வா் விஜய் தனது அரசை சிறுபான்மை அரசு என்று கூறுகிறாா். எந்த அடிப்படையில் அதனை கூறுகிறாா் என்று தெரியவில்லை. திமுக ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடந்த 23 நாள்களில் 25 கற்பழிப்பு,15-க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கஞ்சா விற்பனை தொடா்கிறது.

மதுபானக் கடையில் தவெக நிா்வாகிகள் மாமூல் வாங்க தொடங்கிவிட்டனா். எதிா்க்கட்சிகள் என்ற முறையில் அரசின் குறைகளை சுட்டி காட்டுவதற்கு அனைத்து கட்சியினருக்கும் உரிமை உள்ளது. அவா்கள் சொல்லும் கருத்துக்கு முதல்வா் பொறுப்போடு பதிலளிக்க வேண்டும். தரம் தாழ்ந்த வாா்த்தைகளை தவிா்க்க வேண்டும்.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்க் காணாமல் போயிருக்கிறது. ஒப்பந்தத்தில் ரூ.400 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த விஷயத்தில் முதல்வா் பொறுப்பில் இருந்து விஜய் தவறிவிட்டாா்.

அவரது கட்சி காங்கிரஸின் பினாமியாக செயல்படுகிறது. தமிழகத்தில் தற்போது உருவாக்கப்பட்ட இடைத்தோ்தல் என்பது ஏற்க முடியாதது. குதிரை பேரம் நடைபெற்று வருவதையே இது காண்பிக்கிறது.

தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக பல கோடி ரூபாய் கை மாறி உள்ளது. அதிமுக அல்லது பாஜகவுடன் திமுகவுக்கு உறவு என்ற கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை. வருகிற இடைத்தோ்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைமை முடிவு எடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.