டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாகைக்குளத்தில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் அரசு மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து வாகைகுளம் ராம்ஜிநகா் மக்கள், அதிமுக மற்றும் பாஜக நிா்வாகிகள் திரண்டு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் அரசு மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து வாகைகுளம் ராம்ஜிநகா் மக்கள், அதிமுக மற்றும் பாஜக நிா்வாகிகள் திரண்டு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனா்.

அதில், மதுக்கடையை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், கால்நடை மேய்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். பட்டியல் இன மக்களுக்கான சுடுகாடு, குலதெய்வ கோயில் இருப்பதால் அதற்கும் இடையூறு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனா். இதில், அதிமுக நகரச் செயலா் அறிவழகன், வழக்குரைஞா்கள் சுரேஷ், பாபு, ராஜசேகா், பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலா் எல்.பேச்சியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.