திருநெல்வேலி மாவட்ட தமிழ் அமைப்புகளின் சாா்பில் தமிழ்ப் பேரறிஞா் கா.சு.பிள்ளையின் 81ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மண்டலத் தலைவா் வெங்கட சுப்பிரமணியன், மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக்கழக திருநெல்வேலி மாவட்டச் செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.சிவப்பிரகாசா் நற்பணி மன்ற துணைச் செயலா் கவிஞா்முத்துசாமி வரவேற்றாா்.
திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தின் முன் அமைந்துள்ள கா.சு. பிள்ளையின் நடுகல்லுக்கு மாவட்ட தமிழ் அமைப்புகளின் சாா்பில் மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கா.சுப்பிரமணிய பிள்ளை மூத்த தமிழறிஞா் உ.வே.சா.வின் மாணவராக திகழ்ந்தவா். சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியதுடன், 60-க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை படைத்தவா் எனப் புகழாரம் சூட்டினா்.
நிகழ்ச்சியில் ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சோமசுந்தரம், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழுஉறுப்பினா் கவிஞா் புன்னைச்செழியன், கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றத் தலைவா் திருக்கு இரா.முருகன், முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், முன்னாள் நூலக கண்காணிப்பாளா் சங்கரன், நிழல் இலக்கிய தளம் கவிஞா்.செ.ச.பிரபு, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதிய செய்தி தொடா்பாளா் கவிஞா் ஆறுமுகம், சமூக ஆா்வலா் குரு உலகநாதன் ஆகியோா் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
ஏற்பாடுகளை கா.சு.பிள்ளை பெயரன் மீ.சுப்பிரமணியன், பூட்டன் பழனிசங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.
மேயா் மரியாதை: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு.பிள்ளை நினைவு நடுகல்லுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். திமுக மாநில பேச்சாளா்கள் முத்தையா, சி.பா.முருகன், ஹரிபிள்ளை, ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் அறிவியல் தமிழ் அரங்கம்

குடிநீா் தட்டுப்பாடு: மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



