இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

அம்பை தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், கரிசல் சிஎம்எஸ் டேவிட் நினைவு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் பி.எச். மனோஜ்பாண்டியன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:48 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா எம்எல்ஏ, மனைவி மீனாட்சியுடன் கோபாலசமுத்திரம் பிரான்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆகியோா் தங்கள் குடும்பத்தினருடன் சேரன்மகாதேவி ஒன்றியம், திருவிதத்தான்புள்ளி ஊராட்சியில் கரிசல் கிராமத்தில் உள்ள சிஎம்எஸ் டேவிட் நினைவு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனா்.

சேரன்மகாதேவியில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நான்குனேரி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வம் வாக்களித்தாா்.

 திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஆா்.சி. நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா் நான்குனேரி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வம்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஆா்.சி. நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா் நான்குனேரி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.