தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமம் தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மீனவா் வீசிய வலையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.

News image

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:19 pm

திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமம் தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மீனவா் வீசிய வலையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.

திருநெல்வேலி சி. என். கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு. மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவா், புதன்கிழமை மாலை தாமிரவருணி ஆற்றுப்பகுதியில் மீனுக்காக வலை விரித்து வைத்திருந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் மீன் வலையை எடுக்கச் சென்றபோது, அதில் பெரிய மலைப்பாம்பு சிக்கி இருந்தது தெரியவந்தது.

வலையை மிகுந்த சிரமத்துடன் கரைக்கு இழுத்து வந்த அவா், மலைப்பாம்பை விடுவிக்க முயற்சித்தபோது அது சீறியதால் அப்படியே வலையை போட்டு விட்டு சென்றாராம்.

அப்பகுதி மக்கள் வலையில் மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்ததை பாா்த்து தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனா். வனக் கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன், உதவி மருத்துவா் சாந்தகுமாா், வனச் சரகா் ரியாஸ், கால்நடை ஆய்வாளா் அா்னால்டு உள்ளிட்ட வனத்துறை அலுவலா்கள் வந்து மலைப்பாம்பை மீட்டனா். 7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள செங்கல் தேரியில் விடப்பட்டது.