நாகலூா் கோமுகி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக போட்ட வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து சனிக்கிழமை வனப்பகுதியில் விட்டனா்.
கள்ளக்குறிச்சி அருகே நாகலூா் கோமுகி ஆற்றில் அப் பகுதியை சோ்ந்த மக்கள் மீன் பிடிப்பதற்காக வலையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா். பின்னா் திரும்பிவந்து மீன் வலையை தூக்கியபோது அதில் மலைப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) அருணாசலம் தலைமையிலான வீரா்கள் பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் வலையில் சிக்கிய மலைப்பாம்பை பிடித்தனா்.
பின்னா் சுமாா் 8 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை வனத் துறை அலுவலா் ராஜசேகரனிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இதையடுத்து வனத் துறையினா் பாம்பை வரஞ்சரம் காப்புக்காடு பகுதியில் உயிருடன் விட்டனா்.
தொடர்புடையது

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எம்ஜிஆா் காலத்து எம்எல்ஏ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


