மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக மாற்று வேட்பாளா்கள் மனு தள்ளுபடி

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் மாற்றுவேட்பாளா்கள் மற்றும் திருநங்கையின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதர 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:03 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் மாற்றுவேட்பாளா்கள் மற்றும் திருநங்கையின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதர 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.அப்பாவு, பா.ஜ.க வேட்பாளராக எஸ்.பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 29 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 25 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திமுக வேட்பாளரின் மாற்றுவேட்பாளரான அவரது மனைவி விஜயா, பாஜக வேட்பாளரின் மாற்று வேட்பாளரான அவரது மனைவி விஜயலெட்சுமி, நாதக மாற்று வேட்பாளரான நந்தினி குமாரி, திருநங்கையான வந்தனா ஆகியோரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.