மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 6:49 pm

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக பேரவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 18 வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

திமுக வேட்பாளா் மு. அப்பாவு, மாற்றுவேட்பாளராக அவரது மனைவி விஜயா, பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயலெட்சுமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா. கிரிஜா தாமரைபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பாளையங்கோட்டையைச் சோ்ந்த தனேஷ் பேரின்பசெல்வன் மனைவி இசக்கியம்மாள், திருநெல்வேலி திருநங்கையா் குடியிருப்பைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த வந்தனா (33) (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளா்களாக ஆ. திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்வன், தெற்கு கருங்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், ஆவரைகுளத்தைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன், பழவூா் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 18 போ் மனுதாக்கல் செய்தனா்.

ஏப். 4ஆம் தேதி தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், ராதாபுரம் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.