திருநெல்வேலி, மே 25: தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் இயந்திரவியல் (ஙஉஇஏஅசஐஇஅக) பாடப் பிரிவில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த ஆர்வத்தைப் பணமாக்கும் வகையில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளில் "அடிப்படை பொறியியல்' (இஞதஉ எதஞமட)என அழைக்கப்படும் அமைப்பியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய படிப்புகளை முன்பு மாணவர்கள் பயின்று வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
கணினியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பின்னர், தொழில்நுட்ப கல்வித் துறையில் உப பிரிவுகளாக உருவான கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். எளிதில் வேலைவாய்ப்பும் பெற்றனர்.
கடந்த காலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சியால், மாணவர்கள் "அடிப்படை பொறியியல்' பாடப் பிரிவுகளை ஒதுக்கிவிட்டு கணினி அறிவியல் பாடத்தை மட்டுமே பயின்று வேலைவாய்ப்பைப் பெற்று வந்தனர். அடிப்படை பொறியியல் துறையில் இல்லாத அளவிற்கு கணினித் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்ததோடு ஊதியமும் பல மடங்கு கிடைத்ததால் அத் துறைக்கு மாணவர்கள் பெருமளவில் படையெடுத்தனர்.
பொருளாதார நெருக்கடி: கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அத் துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதோடு ஊதிய வெட்டு, பணிப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்பு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவர்கள் மீண்டும் "அடிப்படை பொறியியல்' துறை பக்கம் திரும்பியுள்ளனர்.
கடந்த ஆண்டிலேயே இதன் தாக்கம் தொடங்கிவிட்டதால் இந்த ஆண்டு "அடிப்படை பொறியியல்' பாடப் பிரிவுகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இயந்திரவியல் பாடத்தில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்து, அமைப்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடங்களுக்கும் மவுசு அதிகரித்து வருவதாக பொறியியல் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.2 லட்சம் நன்கொடை: மாணவர்களின் இந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயந்திரவியல் பாடப் பிரிவுக்கான நன்கொடையை அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் இறுதி காலக்கட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நன்கொடை வாங்கிக் கொண்டும், சில கல்லூரிகள் நன்கொடை இல்லாமலேயும் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டன.
இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே இயந்திரவியல் பாடத்திற்கு ரூ.2 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கத் தொடங்கி விட்டனர். இது,தென் மாவட்ட நிலவரம்தான். வட மாவட்டங்களில் இதைவிட பல மடங்கு கூடுதல் நன்கொடை வசூலிக்கப்படுவதாக இங்குள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன். இதே நிலை நீடித்தால் கணினி பிரிவுகளுக்கு ஏற்பட்ட கிராக்கி மீண்டும் "அடிப்படை பொறியியல்' பிரிவுகளுக்கு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
காரணம் என்ன? ""அடிப்படை பொறியியல் பயின்றவர்கள் அந்தந்த துறைகளிலும், கணினிப் பயன்பாடு உள்ள துறைகளிலும் வேலை செய்ய முடியும். ஆனால், கணினி அறிவியலை மட்டுமே பயின்றவர்கள் பிற துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியாது.
இந்த அடிப்படை தத்துவம் குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் மீண்டும் "அடிப்படை பொறியியல்' பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக கருதுகிறேன்'' என்றார் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. காளியப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

