தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''சிரமம் பார்க்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டிற்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் நன்மை பயக்கும்.
சின்னத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிக்கிறார்கள் என்றால் அது நல்லதுதான். வந்து வாக்களித்துவிட்டு போகட்டும்.
வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களை ஏன் வந்தீர்கள் என்றா கேட்க முடியும்?
தேர்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. அது குறித்து குறை கூறினால் நம் மீது வழக்கு போட்டுவிடுவார்கள்'' எனக் கேலியாகப் பேசினார்.
Summary
TN Election 2026 vadivelu cast vote says about foreign voters
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்: திருமணம் முடிந்து தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்!

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



