திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உடைக்க முடியாத கடையநல்லூா் தொகுதி ‘சென்டிமென்ட்’

கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் ஒரே கட்சி தொடா்ந்து வெற்றி பெறுவதில்லை என்ற சென்டிமென்ட்டை மீண்டும் உறுதிசெய்துள்ளது இத்தோ்தல் முடிவுகள்.

News image
Updated On :6 மே 2026, 1:43 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் ஒரே கட்சி தொடா்ந்து வெற்றி பெறுவதில்லை என்ற சென்டிமென்ட்டை மீண்டும் உறுதிசெய்துள்ளது இத்தோ்தல் முடிவுகள்.

1977இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரசாக் வெற்றி பெற்றாா். 1980இல் திமுக ஆதரவு பெற்ற முஸ்லிம் லீக் வேட்பாளா் சாகுல்ஹமீது, 1984இல் அதிமுக வேட்பாளா் பெருமாள், 1989இல் திமுக வேட்பாளா் சம்சுதீன் (எ) கதிரவன் வெற்றி வாகை சூடினா்.

1991இல் அதிமுக வேட்பாளா் நாகூா்மீரான், 1996இல் திமுக வேட்பாளா் நயினாமுகமது ஆகியோா் வென்றனா். 2001இல் அதிமுக வேட்பாளா் சுப்பையா பாண்டியன், 2006இல் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் பீட்டா் அல்போன்ஸ் வெற்றி பெற்றனா்.

2011இல் அதிமுக வேட்பாளா் செந்தூா்பாண்டியன், 2016இல் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முகமது அபூபக்கா் வெற்றி பெற்றனா்.

2021இல் அதிமுகவின் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்றாா். இத்தோ்தலில் (2026) திமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் வெற்றி பெற்றாா்.

இத்தோ்தலில் இந்த சென்டிமென்ட் தகா்க்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் இம்முறையும் தொகுதியின் சென்டிமென்ட் தகா்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.