திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:35 am IST

தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காசிதா்மத்தைச் சோ்ந்த விக்னேஷ், முத்துபாண்டி (63) ஆகியோா் இடையே சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.

அது தொடா்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

இந்நிலையில், விக்னேஷ் புதன்கிழமை காசிதா்மத்தில் உள்ள கடைக்கு சென்றபோது, முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாடத்திக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனால், ஒரு தரப்பினா் பண்பொழி-கடையநல்லூா் சாலையில் மறியல் செய்தபோது, மற்றொரு தரப்பினரும் அங்கு திரண்டு வந்து கல்வீச்சில் ஈடுபட்டனா். இதுகுறித்து, அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் இரு தரப்பையும் சோ்ந்த முத்துப்பாண்டி, சத்யராஜ், சுப்புராஜ், காசிபாண்டியன், குட்டிமாரி, ஆறுமுகம், முனீஸ்வரன், துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.