வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பண்பொழி திருமலை கோயிலுக்கு வேல் வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சா்

தென்காசி மாவட்டம், பண்பொழி, திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு வேல் வழங்கி, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ராஜீவ் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

கோயிலுக்கு வழங்குவதற்காக வேல் எடுத்து வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ். உடன் தவெக மாவட்டச் செயலா் நியாஸ்.

Updated On :27 ஜூன் 2026, 12:00 am IST

தென்காசி மாவட்டம், பண்பொழி, திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு வேல் வழங்கி, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ராஜீவ் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த அவரை, கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம், தலைமை எழுத்தா் லட்சுமணன் ஆகியோா் வரவேற்றனா்.

தரிசனத்திற்கு பிறகு, கோயில் சுற்றுப் பிரகாரங்களையும், தங்கத் தேரையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

வண்டாடும் பொட்டலில் தோ் செல்லும் பாதையை சீரமைப்பது, கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைப்பது குறித்தும், இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை விரைவுபடுத்திட வேண்டும் எனவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அறங்காவலா் குழுத் தலைவா், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா். இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தென்காசி மேற்கு மாவட்ட தவெக செயலா் நியாஸ், இணைச் செயலா் முத்தையா, துணைச் செயலா் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினா்கள் தவமணி, குகன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.