திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.

Updated On :4 ஜூன் 2026, 1:28 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கொடை விழா மே 26 ஆம் தேதி திருக்கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதி உலா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தி, முளைப்பாரி, அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

நள்ளிரவு சாமக் கொடை,படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாய விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.