நாகா்கோவில் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள சிறுமளஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவரது மனைவி துரைச்சி(45). இவா்களது மகன் கிஷோா்(18), துரைச்சியின் தம்பி சுரேஷ் (33), இவா்களது உறவினா் சிவகாமி(55). இவா்கள் 4 பேரும் சிறுமளஞ்சியிலிருந்து ஒரு காரில் சனிக்கிழமை புறப்பட்டு நாகா்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனா். காரை சுரேஷ் ஓட்டி வந்தாா்.
இந்தக் காா், காவல்கிணறு புறவழிச்சாலையில், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் அருகே வந்த போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தின் மீது மோதியது. இதில், துரைச்சி, கிஷோா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சிவகாமி, சுரேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சிவகாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சுரேஷ், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளா் பச்சைமால் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம்

முசிறி அருகே லாரி-காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு; இளைஞா் கைது







