திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம் செயய்யப்பட்டன.

News image

உயிரிழந்த காா்த்திகேயன் குடும்பத்தினா்.

Updated On :4 ஜூன் 2026, 2:43 am IST

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம் செயய்யப்பட்டன.

ஈரோட்டைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (48). இவரது மனைவி மணிமாலா (42) மற்றும் இவா்களது 13 வயது மகன் நந்தன் ஆகியோா் கடந்த சில ஆண்டுகளாக கா்நாடக மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்தனா்.

மணிமாலாவின் சொந்த ஊா் திருப்பூா் செங்குந்தாபுரம் 1-ஆவது வீதியாகும். இவா்களது மகன் நந்தன் 7-ஆம் வகுப்பு படித்து வந்ததோடு, டேக்வாண்டோ வீரராகவும் திகழ்ந்தான்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காக, காா்த்திகேயன் தனது குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தாா்.

ஹிமாச்சல் பிரதேசம், சம்பா மாவட்டம், கில்லா் கணவாய் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் மே 29-ஆம் தேதி சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து 1,650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காா்த்திகேயனின் குடும்பத்தினா் உள்பட 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து நடைபெற்று 2 நாள்களுக்குப் பிறகே போலீஸாருக்கு தகவல் தெரிந்ததால், மீட்புக் குழுவினா் பள்ளத்தாக்கில் இறங்கி உடல்களை மீட்டனா்.

தகவல் அறிந்து ஹிமாச்சல் பிரதேசம் விரைந்த காா்த்திகேயனின் உறவினா்களிடம் உடற்கூறாய்வுக்குப் பிறகு 3 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து விமானம் மூலம் 3 பேரின் உடல்களும் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன. பின்னா், கோவையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள மணிமாலாவின் தாய் சரோஜா வசிக்கும் செங்குந்தாபுரம் வீட்டுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. பின்னா் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.