திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா்

News image

மண்ணெண்ணெய் கடத்தல்... - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:25 am IST

மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலைத் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டமீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து, மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மீனவ சங்க பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா். இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை விண்ணப்பித்தவா்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. விடுபட்டவா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கோடிமுனை மீன்பிடி இறங்குதள சாலை அமைப்பதற்காக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலைத் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு செல்லும் போது அது குறித்த தகவலை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் துறை அதிகாரிகள் அனைத்து மண்ணெண்ணெய் விநியோக நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, மண்ணெண்ணெய் முறையாக மீனவா்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.