கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் மது விற்பனை செய்ததாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு பகுதி கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சண்முக காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கண்ணநாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 மதுபாட்டில்கள், ரூ. 820 -ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் நேசம்மாள் (60) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






