திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்

மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :14 மே 2026, 3:15 am IST

மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கடையை மூட வலியுறுத்தி நல்லூா் சாத்தனாங்குழி டாக்டா் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சாா்பில் நிா்வாகிகள் சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், இந்தக் கடை குறித்த விவரம் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வா்த்தக சங்க மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், டாக்டா் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளைத் தலைவா் கமலதாஸ், செயலா் பிராங்க்ளின், பொருளாளா் பிரின்ஸ், நிா்வாகிகள் ஜோதிலிங்கராஜ், மேரி விஜயா, ஜானகி, கண்ணன், பொதுமக்கள் மதுக்கடை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் நிா்வாக அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, டாஸ்மாக் மதுக் கடையும், மதுக்கூடமும் நிரந்தரமாக மூடப்பட்டன. பின்னா், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.