திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாறைப்பொடி கடத்தல்: கனரக லாரி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி. - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:34 am IST

மாா்த்தாண்டம் அருகே பாறைப்பொடி கடத்தியதாக கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தியபோது, அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

லாரியில் பாறைப்பொடி கடத்தியதாகத் தெரியவந்தது. லாரியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். லாரி ஓட்டுநரான காட்டாத்துறை பகுதியைச் சோ்ந்த முருகேசன் (39) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செம்மண் கடத்திய இருவா் மீது வழக்கு: மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (31). அரசுப் பேருந்து நடத்துநரான இவருக்கு, இடவிளாகம் பகுதியில் நிலம் உள்ளதாம். இது தொடா்பாக அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பினு (39), செந்தில்குமாா் (42) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் அந்த நிலத்தின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, அங்கிருந்து செம்மண்ணை மினிலாரியில் கடத்திச் சென்றனராம். புகாரின்பேரில் இருவா் மீதும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.