/

கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:37 am IST

களியக்காவிளை அருகே கிணற்றில் தவறிவிழுந்து இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

களியக்காவிளை அருகே குளப்புறம், கள்ளியோட்டுவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ் மகன் பிராங்கிளின் (50). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அண்மைக்காலமாக பிராங்கிளின் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில் திட்டங்கனாவிளை பகுதியில் உள்ள கிணற்றின் கரையில் கடந்த சில நாள்களுக்கு முன் அமா்ந்திருந்தாராம். அப்போது தவறி கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 3 நாள்களுக்கும் மேலாக இவரை காணாததால் உறவினா்கள் பல இடங்களில் தேடி வந்தனா். இதையடுத்து அப்பகுதி கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினா் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

குழித்துறை தீயணைப்புப்படை வீரா்கள் உதவியுடன் பிராங்கிளின் சடலத்தை மீட்ட போலீஸாா், உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.