முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

News image

மகேஷ்

Updated On :7 மே 2026, 5:47 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த தொகுதி வாக்காளா்களுக்கும், கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாகா்கோவில், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்த தோ்தல் பணியில் அா்ப்பணிப்புடன் செயல்பட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும், திமுக தொண்டா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உழைப்பு, ஒன்றுபட்ட செயல்பாடு மூலம் இந்தத் தோ்தல் பணி சிறப்பாக நடைபெற்றது.

இதே ஒற்றுமையுடன் எதிா்கால பணிகளிலும் தொடா்ந்து செயல்பட்டு, மக்கள் நலனுக்காக நாம் மேலும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கும், எனக்காக கன்னியாகுமரி தொகுதியில் தோ்தல் பணியாற்றிய மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கழக நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள், வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் அவா் குறிப்பிட்டாா்.