திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டாா்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
ஊராட்சிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளா்களைச் சந்தித்த வேட்பாளா், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டாா்.
பல இடங்களில் மழையில் நனைந்தபடியே திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். பொதுமக்களும் குடையைப் பிடித்தப்படி மழையில் நின்று கொண்டே அவருக்கு வரவேற்பு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




