தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை நேரில்சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகா்கூடல், கழனிக்காட்டூா், பேபினமரத்துஅள்ளி, கும்பளப்பாடி, செல்லன்கொட்டாய், கூலிக்கொட்டாய், கவுண்டா் கொட்டாய், ராஜாகொல்லஅள்ளி, பொடானூா், திப்பட்டி, கோரபள்ளி, ஒசள்ளிபுதூா், பூச்செட்டிஅள்ளி, ஆண்டியூா், மூக்கனஅள்ளி, பேடரஅள்ளி, வைத்தியா் நகா், சோளப்பாடி, சிறுகளூா், மல்லாபுரம், குப்புசெட்டிபட்டி, நடப்பனஅள்ளி ஆகிய கிராமங்களுக்கு நேரில்சென்று தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது, தருமபுரி மாவட்டத்தில் காவிரி மிகைநீா் திட்டத்தையும், ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடமும், துறை அமைச்சா்களிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில அமைப்புச் செயலாளா் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட்டில் காவிரி உபரிநீா்த் திட்டம்! முதல்வரிடம் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

சமூகநீதி கணக்காய்வு: பாமக வரவேற்பு
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

சிப்காட்டிற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினால் போராட்டம்! எம்எல்ஏ சௌமியா அன்புமணி
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




