
டாஸ்மாக்போல ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் கட்டணம்: சௌமியா அன்புமணி கோரிக்கை
டாஸ்மாக் கடைகளைப்போல ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை கொண்டுவர வேண்டும் என சௌமியா அன்புமணி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தது குறித்து...
சௌமியா அன்புமணி எம்எல்ஏ - TN Assembly
டாஸ்மாக் கடைகளைப்போல ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை கொண்டுவர வேண்டும் என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி எம்எல்ஏ பேசியதாவது, "டாஸ்மாக் கடைகளில் ஊழலைத் தடுப்பதற்காக ஆன்லைன் முறை பின்பற்றப்படுவதுபோல, ரேஷன் கடைகளிலும் கொண்டு வரலாம்.
டாஸ்மாக் மது வாங்குவதை எளிதாக்க தவெக அரசு ஆன்லைனில் வசதி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ரேஷன் கடைகளில் பொருள்களை எளிதாக வாங்குவதற்கும் ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சில ரேஷன் கடைகளில் எண்ணெய், அரிசி போன்ற பொருள்கள் இருந்தும், இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். ஆகையால், க்யூஆர் கோடு முறையில் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்துவிட்டு, கடைகளில் சென்று வாங்குவதுபோல ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
Sowmya Anbumani MLA urges the introduction of an online system in ration shops, similar to TASMAC outlets
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





