ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இதை மட்டும் செய்தால் கர்நாடகத்திடம் நாம் கையேந்த வேண்டியதில்லை! சௌமியா அன்புமணி

சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியது பற்றி...

PMK MLA Sowmiya Anbumani speech in tn assembly on cauvery issue

சௌமியா அன்புமணி - TN

Published On :11 ஆகஸ்ட் 2026, 11:54 am IST

இந்த 2 வழிகளில் மழைநீரைச் சேமித்தால் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்த வேண்டியதில்லை என பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசினார்.

பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி இன்று பேரவையில் பேசுகையில்,

"சேவை உரிமைச் சட்டம், வேளாண் விருதுகள் அறிவிப்பு, மகளிர் வேலைவாய்ப்பைத் தரும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை என்பது மிகுந்த ஏமாற்றம்.

பொது பட்ஜெட்டுக்கு ரூ. 4.72 லட்சம் கோடி. ஆனால், 5 கோடி விவசாயிகளுக்கு வெறும் ரூ. 14,000 கோடி தானா?

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

முன்பு எல்லாம் 50 நாள்களாவது மழை பெய்யும். இப்போது விரைவாக அதிக மழைப்பொழிவு பெய்து, அதிக தண்ணீர் கடலில் கலக்கிறது. பாலாறு, காவிரி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி மழைநீரைச் சேமிக்கலாம்.

காவிரி 420 கிமீ ஓடுகிறது. 10 கிமீ - க்கு ஒரு தடுப்பணை கட்டினால்கூட நீரை சேமிக்கலாம். 25 -30 தடுப்பணைகள் கட்டினால்கூட போதும். 20 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கலாம்.

தமிழகத்தில் 35 பெரிய ஆறுகள் ஓடுகின்றன. தடுப்பணைகள் மூலமாக 100 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். அதன்பிறகு கர்நாடகத்திடம் கையேந்தத் தேவையில்லை. ஆந்திரம், கேரளத்தையும் நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை.

இரண்டாவது வழி ஏரி, குளங்களைத் தூர்வாருவது. 42,000 ஏரிகள் இருந்த நிலையில் இப்போது 27,000 ஏரிகள்தான் இருக்கின்றன. இந்த ஏரிகளைத் தூர்வாரினாலே 100 -150 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஒரு மீட்டர் அளவுக்கு தூர்வாரினாலே போதுமானது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

இந்த திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் இல்லை.

அதேபோல வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலை இல்லாமல் இருக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி என அரசுத் தேர்வுகளுக்கு பல ஆண்டுகள் படித்து சிலர் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சிகளில் உள்ள பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன" என்றார்.

Summary

If rainwater is harvested using these two methods, there will be no need to go begging to Karnataka! – Sowmya Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.