கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் கிடைத்துள்ளதால் அக்கட்சியினா், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டத் தொழிலாளா்கள் நிறைந்த பழைய திருவட்டாறு தொகுதி, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகியவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த பேரவைத் தொகுதிகளாகும். மாநில அளவில் பிரபலமான தொழிற்சங்கத் தலைவா்களாகவும், கட்சி நிா்வாகிகளாகவும் இருந்த ஜே. ஹேமச்சந்திரன், ஜி.எஸ். மணி, டி. மணி, எஸ். நூா் முகமது, ஆா். லீமா ரோஸ் உள்ளிட்டோா் இத்தொகுதிகளிலிருந்து சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாவா்.
இம்மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் 2006 தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜான் ஜோசப் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2011, 2016 தோ்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவினா். 2021 தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2006-க்குப் பின்னா் 20 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா்.செல்லசுவாமி வெற்றி பெற்றுள்ளாா்.
இதனாால், ரப்பா் தோட்டத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட மலையோரப் பகுதி தொழிலாளா்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் இத்தொகுதியில் வெற்றி பெற்ற ஆா்.செல்லசுவாமி மூலம் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையும், தொழிலாளா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 30 முதல் விற்பனை

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

குமரியில் மீண்டும் தொடங்கிய ரப்பா் பால்வடிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



