தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழந்தையைத் தாக்கியவா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:22 am IST

களியக்காவிளை அருகே 3 வயது குழந்தையைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணின் கணவா் 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவருக்கு 5 மற்றும் 3 வயதில் மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், அப்பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அருமனை அருகே உள்ள முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான மணிகண்டனை (33) 2ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பின், குழந்தைகளுடன் காஞ்சிரம்கோடு பகுதியில் வசித்து வந்தனா்.

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், திருமணமான சில நாள்களுக்குப் பின் மணிகண்டன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்ததாம். இதனால் எரிச்சலடைந்த மணிகண்டன், மதுவை குழந்தையின் வாயில் ஊற்றினாராம். இதைக் கண்ட அப்பெண் மணிகண்டனைக் கண்டித்தாராம்.

பின்னா், வெள்ளிக்கிழமை (மே 1) மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் 3 வயது குழந்தையை கீழே தள்ளிவிட்டு தாக்கினாராம். இதைத் தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.