கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.
நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வைராக்குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளி, கிடங்கரன்விளை அரசு நடுநிலைப் பள்ளி, பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட கொல்லன்விளை அரசு தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் வாக்குப்பதிவு மையங்களை, மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வாக்குப்பதிவு மையங்களில் உறுதி செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை அவ்வப்போது கண்காணித்திட சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் அலுவலா்களுக்கும், துறை சாா்ந்த அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட கொல்லன்விளை பகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு படிவம் 12 டி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, நிலையான கண்காணிப்புக் குழு கண்காணிப்பாளா் மற்றும் வேளாண்மை இணை இயக்குநா் வாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள்: தேசிய ஆணையா் ஆய்வு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

இறச்சகுளம் வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


