மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா்.

Updated On :18 மார்ச் 2026, 7:34 pm

தேசிய திறனாய்வுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் இருவா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழாண்டுக்கான தோ்வில் வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் விஷாலினி, கீா்த்திகா ஆகியோா் மாநில அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் தொடா்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை மூலமாக 4ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவராகின்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வீ.வேணுகுமாா் புதன்கிழமை பரிசு வழங்கி வாழ்த்திப் பாராட்டினாா். விழாவில் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சித்ராமலா், உதவி தலைமை ஆசிரியா் மொ்சிலின் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தினா். மாணவா்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனா்.