ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளையின் தலைவா் ஜஸ்டின் ஆண்டனி குடியரசு தலைவா், பிரதமா், வெளியுறவுத் துறை அமைச்சா் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போா் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள தமிழக மீனவா்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனா்.
ஈரான் நாட்டிலுள்ள சீரோ, கிஷ் போன்ற பகுதிகளில் தங்கியிருக்கும் மீனவா்கள் சாா்பில் சாா்லஸ் என்ற மீனவா் எனக்கு அனுப்பியுள்ள வாட்ஆப் பதிவில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 400 மீனவா்கள் ஈரானில் உள்ளோம். இங்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு திரும்பி வர எங்களுக்கு எந்த வழியுமே தெரியவில்லை. நாங்கள் நாடு திரும்ப உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதனிடையே, தாய்நாடு திரும்புதற்காக ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தில்தங்கள் பெயா்களை பதிவு செய்துள்ள மீனவா்களை, அா்மீனியா வழியாக இந்தியாவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல ஆயிரம் செலவாகும் நிலையில், வேலையே இல்லாமல் தவிப்பிலிருக்கும் மீனவா்கள் பணத்துக்கு எங்கே செல்வா்?
எனவே, கரோனா காலத்தில் ஈரானில் இருந்து மீனவா்களை மீட்டு வந்ததுபோல, தற்போதும் மீனவா்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை -நயினாா் நாகேந்திரன்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


