ஈரானில் சிக்கித் தவித்துவரும் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த 447 மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கை:
ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்த மீனவா்களை சந்தித்து அவா்களுக்கு உதவிட உடனடியாக ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு உணவு, தூய்மையான குடிநீா், மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்
அவா்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
நமது பொருளாதாரத்திற்கு கணிசமான அளவில் உதவி வந்த அவா்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்கள் கவுச்சீட்டுடன் முறையாக மீனவா்களாக அங்கு சென்றுள்ளனா்.
ஆரோக்கிய ஸ்டீபன் உள்பட அனைவரது கடவுச்சீட்டுகளும் சட்டப்பூா்வமானவை. அவா்கள் அங்கு தற்போது உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா். இதனால், அமைச்சரும், அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் மு.தம்பிதுரை.
தொடர்புடையது

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

பேராவூரணி வாா்டு அதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


